Tuticorin

News March 28, 2025

சீட்பெல்ட் அணிந்து பயணம் செய்ய தூத்துக்குடி போலீஸ் அறிவுரை

image

கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக இருக்கைப் பட்டை எனும் சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது எதிர்பாராத விபத்து அல்லது உடனடியாக பிரேக் அழுத்தப்படும் போது பயணிகளை இருக்கையுடன் பிணைத்து பாதுகாக்க இந்த சீட்பெல்ட் பயன்படுத்தப்படுகிறது.

News March 28, 2025

தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

image

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?

News March 28, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் தனி சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கென தனி சிறப்பு உள்ளது உங்களுக்கு தெரியுமா?. தமிழ்நாட்டிலயே தூத்துக்குடியில் மட்டும் தான் 4 வகை போக்குவரத்துக்களும் உள்ளன. ஆம், விமான சேவை, ரயில் சேவை, கப்பல் சேவை, பேருந்து சேவை என நால்வகை போக்குவரத்து சேவைகளும் உள்ளன. தற்போது, விண்வெளிக்கு செல்லும் ராக்கேட் ஏவு தளமும் வரவுள்ளது. சென்னை விமான சேவை கூட பக்கத்து மாவட்டமான காஞ்சிபுரத்தில் தான் உள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்

News March 28, 2025

தூத்துக்குடியில் 46 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 46 இடங்களில் நாளை(மார்ச் 29) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர்கள் கீதாஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

News March 28, 2025

கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

தூத்துக்குடி: ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

image

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள நியூ காலனி துணை அஞ்சலகத்திலும் இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று(மார்ச் 27) தெரிவித்துள்ளார். காலை 9:30 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News March 28, 2025

இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.

News March 27, 2025

தூத்துக்குடி: இளநீரை கண்டு வியந்த ஆங்கிலேய கலெக்டர்

image

தூத்துக்குடியில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஸ்ரீ வைகுண்டம் பகுதிக்கு வந்தபோது, இளநீரை குடிக்க கேட்டுள்ளார். சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு வைத்துள்ளதால் விவசாயி தர மறுத்த போது, இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? என கேட்டுள்ளார். இளநீரை பறித்த போது அதில் 3 கொம்புகள் இருந்துள்ளது. இன்றும் அந்த இளநீர் தென்திருப்பேரை அழகிய பொன்னம்மை தாயார் உடனுறை கைலாசநாதர் கோயிலில் உள்ளது.*ஷேர்

News March 27, 2025

திருமணத்தடை நீக்கும் அம்பாள் கோயில்

image

கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன் சங்கரராம பாண்டியன், தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால், இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அன்றிலிருந்து இந்த திருத்தலத்தமானது திருமணத்தடை நீங்கவும் மற்றும் குழந்தை வரம் பெறவும் புகழ் பெற்றது. *ஷேர் செய்யவும்*

News March 27, 2025

பண்டாரவிளைக்கு அனுப்பி விடுவேன் – அர்த்தம் தெரியுமா?

image

தூத்துக்குடி, சாயர்புரம் அருகே பண்டாரவிளை பாண்டுவர் (வைத்தியர்) விளை மருவி பண்டார விளை ஆயிற்று. இங்கு கை, கால் முறிவுக்கு கட்டு போடும் வைத்தியர்கள் அதிகம் உள்ளனர். 800 வருடங்களாக இந்த வைத்தியம் நடைபெற்று வருகிறது. மன்னர்கள் காலத்தில் காயமடைந்த வீரர்கள் இந்த ஊரின் அருகே தங்கி வைத்தியம் செய்து கொள்வர். தூத்துக்குடியில் ஒருவரை கோபமாக கை காலை முறித்திடுவேன் என்பதற்கு பண்டாரவிளைக்கு அனுப்புவேன் என்பர்

error: Content is protected !!