India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – சுந்தரி தம்பதியினர் நேற்று (15-ம் தேதி) சிந்தலக்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியதில் தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (15.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், கோவில்பட்டி, மணியாச்சி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது வானிலை இன்று முதல் சீரான நிலமைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மீன்பிடி விசைப்படகுகள் நாளை 16ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்,“மழை வெள்ளம் சூழ்ந்த நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ கால்நடைகளை பராமரிக்கவோ செல்லக்கூடாது; வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளது.*செல்பி எடுப்பவர்களுக்கு பகீருங்கள்*
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் சுமார் 1.15 லட்சம் மாட்டு இனங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணி நாளை (16) துவங்கி 21 நாட்கள் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட இன்று அனுமதி இல்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடலின் சீற்றம் குறைந்துள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பாக நீராடும் படி காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.
கோவில்பட்டியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கருப்பசாமி கடந்த பத்தாம் தேதி பக்கத்து வீடு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 12 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓரினச் சேர்க்கைகாக சிறுவன் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது, அந்த வகையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 83 மிமீ, தூத்துக்குடியில் 74.60 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 315.80 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக மொத்தம் 100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச14) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளையும் தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.