India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சென்னையில் தென்னக இரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதில், “கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள் நின்று செல்லவும்; கடம்பூர் இரயில் நிலையத்தில் பயணிகள் வசதியை மேம்படுத்தல்; கோவில்பட்டியில் சுரங்க பாதை அமைத்தல்” போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச19) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய கூட்ட அரங்கில் இன்று (டிச.19) கொத்தடிமை தொழிலாளர்கள் கண்காணிப்பு குழு மற்றும் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு படை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையை தடுக்கும் வரையில் தீவிரமாக கண்காணிப்பது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்; 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் சேலம் ராஜேந்திரன் முள்ளக்காடு கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் கீதா ஜீவன், மாநகர திமுக செயலாளர்ஆனந்தசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் இன்று தொடங்குவதாக சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மீனவர் காலனி தொம்மையார்கோவில் அருகில் நடக்கிறது. இந்த முகாமில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி போன்றவற்றை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இது குறித்து “பலமுறை உரிய விளக்கம் அளித்தும் கூட, திரும்பத் திரும்ப பொய் குற்றச்சாட்டை எழுப்பி அரைவேக்காட்டுத்தனமாக வதந்தியை @annamalai_k பரப்ப முயல்கிறார்” என அமைச்சர் கீதாஜீவன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தற்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று (டிச.18) வந்த போது விசாரணையை அடுத்த மாதம் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வரும் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரவுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.