Tuticorin

News November 4, 2024

சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருக்கு வரவேற்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த கள ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த குழு தூத்துக்குடிக்கு இன்று வந்தது. தூத்துக்குடி வந்த சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வரவேற்றார்.

News November 4, 2024

தூத்துக்குடி விமான நிலையத் அதிகாரிக்கு ஜனாதிபதி பாராட்டு

image

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 50 பெண் சாதனையாளர்கள், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதியை இன்று நேரில் சந்தித்தனர். இதில், தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு மேலாளர் எம்.ராஜலட்சுமி உட்பட பெண் சாதனையாளர்களை குடியரசு தலைவர் பாராட்டி அவர்களுக்கு விருந்து அளித்தார்.

News November 4, 2024

ஹிந்தி சர்ச்சை; தூத்துக்குடி அமைச்சர் விளக்கம்

image

மகளிர் உதவி மைய பணியிடங்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. இது சர்ச்சையானநிலையில், இதுகுறித்து, அமைச்சர் கீதா ஜீவன் இன்று விளக்கம் கொடுத்தார். அதில், “மகளிர் உதவி மையப் பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. அதனை திருத்தம் செய்யப்பட்டு தமிழ் ஆங்கிலம் என விளம்பரம் வெளியிடப்பட்டது” என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

News November 4, 2024

திருச்செந்தூரில் உதவி மையங்கள் அமைப்பு

image

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 4 காவல் உதவிமையங்கள் (MayIHelpYou), 4 இடங்களில் அவசரமருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது . தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNSDRF) தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

திருச்செந்தூரில் 4500 போலீசார் பாதுகாப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா (நவ02) துவங்கிய நிலையில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான (நவ07) சூரசம்ஹாரம் நிகழ்விற்கு 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கோவில்வளாகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். 

News November 4, 2024

தூத்துக்குடியில் தமிழ் வட்ட எழுத்து கல்வெட்டு 

image

பட்டினமருதூர் அருகே உள்ள வீரபாண்டிய விநாயகர் கோவிலில் வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல், அங்குள்ள உப்பளம் அருகே வழிபாடு செய்யப்பட்டு வந்த சதிகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை இரண்டும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News November 4, 2024

வில்லிசேரி அருகே கார் விபத்து – உயிர் தப்பிய பேராசிரியர்

image

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் ஜாய் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்றுவதற்காக காரில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது கயத்தாறு அருகே வில்லி சேரி நாற்கரச் சாலையில் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

News November 3, 2024

 திருச்செந்தூரில் பலத்த போலீசார் பாதுகாப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா(நவ.2) கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 2காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் ,6 துணைகண்காணிப்பாளர்கள், 27ஆய்வாளர்கள் உட்பட1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் CCTV கேமராக்கள் அமைக்கபட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்

News November 3, 2024

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மறைவு

image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நேற்று(நவ.2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வி. முத்து குட்டி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். சிறந்த பண்பாளர் என்று புகழாரம்.

News November 3, 2024

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி திருவிழா 

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று(நவ.2) துவங்கி நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று(நவ.3) காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 4 மணிக்கு கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.