Tiruvannamalai

News December 20, 2024

இயற்கை வேளாண்மை இலவச பயிற்சி பட்டறை

image

கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் மற்றும் தாளாண்மை இதழ் இணைந்து நடத்தும் மாநில அளவிலான இயற்கை வேளாண்மை பயிற்சி பட்டறை டிசம்பர் 21, 22 தேதிகளில் கலசப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அனைத்து விவசாய வேளாண்மை செயல் வீரர்களும் கலந்து கொள்ளலாம், நுழைவு கட்டணம் இல்லை. முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் அவர்களை (8072314815) தொடர்பு கொள்ளவும்.

News December 20, 2024

108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணி: வேலை வாய்ப்பு முகாம்

image

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் டிரைவர்பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்நாளை சனிக்கிழமை நடக்கிறது. டிரைவர் பணிக்கு டிச.10ஆம் நடக்கிறது. டிரைவர் பெற்றிருக்க வேண்டும்.இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும்.

News December 20, 2024

பால் பண்ணை குறித்த பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு 

image

திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பால் பண்ணை குறித்த பயிற்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் இன்று (டிச.20)மாலைக்குள் 04175-298258,9551419375 என்ற எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து,பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

News December 20, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

image

திருவண்ணாமலை களம்பூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வடக்கு மாவட்டம் ஆரணி அருகே இத்தகைய போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியூட்டன், ந.முத்து தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

News December 20, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள்,கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 19, 2024

கலைஞர் கைவினை திட்டம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை கலெக்‌டர் பாஸ்கரா பாண்டியன் கூறியபடி, தமிழ் நாடு அரசு கைவினைததொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் நவீன உதவிகளை வழங்கி, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோருக்கு கைவினை தொழில் கடன் உதவி அளிக்கின்றது. 25 வகை கைவினை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். மானியமும், குறைந்த வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் www.msmeonline.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News December 19, 2024

கனமழையால் 5,100 ஏக்கர் பயிர்கள் சேதம்

image

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் வந்தவாசி மற்றும் தெள்ளார் வட்டாரங்களில் பலத்த பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தவாசி வட்டாரத்தில் 1,700 ஏக்கர் நெல், 65 ஏக்கர் உளுந்து, 20 ஏக்கர் கரும்பு, 50 ஏக்கர் மணில்லா மற்றும் தெள்ளார் வட்டாரத்தில் 2,000 ஏக்கர் நெல், 30 ஏக்கர் கரும்பு, 375 ஏக்கர் உளுந்து, 260 ஏக்கர் மணிலா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

News December 19, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடர்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற முகாமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தார்.

News December 18, 2024

போதைப் பொருட்கள் விற்பனை செய்த இருவர் மீது பாய்ந்த வழக்கு

image

செங்கம் காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4520 கிராம் ஹான்ஸ் மற்றும் 100 கிராம் குளிர்ந்த உதடு ஆகிய போதை பொருட்களை மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் விற்பனை செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த குடுபா மகன் ஜாகீர் (வ-25) மற்றும் தளவாநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் ராமநாதன் (வ-47) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!