Tiruvannamalai

News December 24, 2024

தி.மலையில் 657 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடமிருந்து 657 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

தமிழ் திறனறிவு தேர்வில் 79 மாணவர்கள் தேர்ச்சி

image

திருவண்ணாமலை மாவட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 2024-2025 கல்வி ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 2,35,025 மாணவர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 மாணவிகள், 7 மாணவர்கள் என 79 பேர் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.1,500 உதவித் தொகைக்கு தகுதி பெற்றனர்.

News December 24, 2024

தி.மலையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று செய்யாறு மின்கோட்டம், பெருநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக்கூர், கூழமந்தல், வெள்ளாமலை, மகாஜனப்பாக்கம், உக்கம்பெரும்பாக்கம், நெமிலி, புன்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என் மின்வாரிய பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க

News December 23, 2024

போளூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய கிராமம் கல்லாங்குத்து குன்னத்தூர் சாலையில் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மழையால் சேதம் அடைந்ததால் அந்த வழியாக இன்று (டிசம்பர் 23) காலை டிராக்டர் விவசாய நிலத்திற்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து போளூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 23, 2024

தி.மலை உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

திருவண்ணாமலையில் உள்ள உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம் (1 கிலோ) தக்காளி ரூ.20-25, உருளைக்கிழங்கு ரூ. 50-56, சின்ன வெங்காயம் ரூ.60-70, பெரிய வெங்காயம் ரூ.60-70, மிளகாய் ரூ. 50-56, கத்தரி ரூ. 110-120, வெண்டை ரூ. 50-56, முருங்கை ரூ. 330-350, புடலை ரூ.50-56, பீன்ஸ் ரூ. 90-100, அவரை ரூ.90-100, கேரட் ரூ. 66-72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News December 23, 2024

அதிமுக தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய டி.டி.வி.

image

திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்கு பழனிசாமி முடிவுரை எழுதி விடுவாா்.ஒரே நாடு,ஒரே தோ்தல் குறித்து எதிர்க்கட்சிகள் பயப்படத் தேவையில்லை.திமுகவை எதிா்க்கும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைந்தால் தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

News December 22, 2024

திருவண்ணாமலை அருகே கன்று விடும் திருவிழா 

image

போளூர் அடுத்த எட்டிவாடி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா இன்று நடைபெற்றது. கன்று விடும் திருவிழாவை முன்னிட்டு போளூர், ஜமுனாமரத்தூர், எட்டிவாடி, களம்பூர், வேலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான கன்றுகள் பங்கேற்று ஓடி குறிப்பிட்ட தூரத்தில் இலக்கை அடைந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News December 22, 2024

 தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம், சென்றடையும் இடம், ஏற்றிச் செல்வதற்கான காரணம், வாகன எண், கால்நடை மருத்துவரின் சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்து அனுமதி பெற்று ஏற்றிச் செல்ல வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.

News December 22, 2024

தி.மலை மாவட்ட மக்கள் கவனத்திற்கு 

image

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன்களை ஒரே தவணையில் செலுத்தி, தீா்வு செய்து கொள்ளும் வாய்ப்பை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கடன்தாரர்கள் பயன்படுத்தி, 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் எஸ். பாா்த்திபன் தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

image

செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வயது மூத்த பெண்ணிடம் பாலியில் ஈடுபட்ட தண்டரம்பட்டு கிராமத்தை சேர்ந்த நபர் மீது செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

error: Content is protected !!