India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், நடந்து முடிந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில், மகாதீப நெய் காணிக்கைகள் கவுண்டர்கள் மூலம் ரொக்கமாகவும், காசோலைகள் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலமாகவும் பெறப்பட்டது. இதன்படி, மகாதீப நெய் காணிக்கை மொத்தம் ரூ.2.18 கோடி பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,84,282 குடும்ப அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். மேலும் டோக்கன் விநியோகம் வீடுகளில் தொடங்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் உரிய நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் எனவும் ஆண்கள், பெண்களுக்கு தனி வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (03.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இன்று பொதுமக்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை- சென்னை ரயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் திருவண்ணாமலையிலிருந்து காலை 4.30 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்னை கடற்கரையை 9.50 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் சந்தை மைதானத்தில் பேருந்து நிலையம் அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ் டி.சரவணன் கழக நிர்வாகிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பேருந்து நிலையம் அமைப்பதாக சட்டமன்ற உறுப்பினர் மக்களிடையே தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் சார்பில் 206 மதுக்கடைகளில் 2 நாட்களில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி ரூ.5.60 கோடியும், ஜன.1ஆம் தேதி ரூ.4.96 கோடியும் என மொத்தம் ரூ.10.56 கோடிக்கு மது விற்பனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இருமடங்கு மது பானங்கள் முன்பே சாத்தியமானது.
குரூப்4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம் என ஆட்சியர் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலையில் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை முடிந்து இன்று அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டது. புயல் மழையின் காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கும் ஜனவரி 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (02.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.