India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானியத்துடன் கூடிய மின் மோட்டாா்கள், கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் இயக்கும் கருவி ஆகியவற்றைப் பெற்று பயன்பெறலாம் இதுதவிர, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை தி.மலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் 14-ஆம் தேதி அதிகாலை 4.46 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில், உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அது மட்டும் இன்றி வெளிநாட்டு பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய நேற்று (ஜன.8) வந்தனர். அதுவும்,பாரம்பரியமான முறையில் பட்டுப்புடவை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை எஸ்.கே.பி.கல்விக் குழுமம் சார்பாக மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள், செஞ்சி இ.பி.எஸ்.மஹாலில் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இதில், கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்திகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் பலர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 21ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 22ஆம் தேதியும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 முதல் பரிசாக வழங்கப்படும். போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகை பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளரும், தொழிலதிபருமான வி.எஸ்.மணிகண்டன் (வழக்கறிஞர்) தலைமையில், முன்னாள் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் நேற்று (ஜன.8) தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்., கமிட்டி தலைவர் <
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அவர்கள் வெற்றி பெற வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் (இன்று 08.01.2025) நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) M.சிவனுபாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) R.சௌந்தரராஜன் உடன் இருந்தார்கள்.
செங்கம் அடுத்த சொர்ப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் முத்துலட்சுமி தனது 4 மாத ஆண் குழந்தையை மேல்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது செவிலியர் கவனக்குறைவால் மருந்து இல்லாத வெறும் ஊசியை செலுத்தியதாக குற்றம் சாட்டி செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையுடன் வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.