India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக, சமூக வலைத்தளங்களில் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜன.23), “போலி கடன் செயலிகள் மூலம் உங்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும். ஆனால், அவ்வாறான செயலிகள் உங்களை ஏமாற்றக்கூடும். விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என விழுப்புணர்வு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எளிதாக கடன் வழங்கும் செயலியை நம்பி ஏமாறாதீர்கள்.
திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று (ஜன.22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் 85ஆவது அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு (AIPOC) நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழ்நாட்டின் சட்டப்பேரவை துணை தலைவர் மற்றும் கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சண்டி, மாநாட்டிற்கு பிறகு, பீஹார் மாநிலம் ராஜ்கிரில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை இன்று பார்வையிட்டார்.
வந்தவாசி போர் 266ஆவது நினைவு தின விழிப்புணர்வு உரையரங்கம் எக்ஸ்னோரா கிளை சார்பில் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது. செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா, எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் பா.இந்திர ராஜன், கிளை தலைவர் மலர் சாதிக், வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி, டாக்டர் எஸ்.குமார், கவிஞர் இஷாக், தொல்லியல்துறை அ.ரஷீத் கான், துணைத் தலைவர்கள் சீனிவாசன், பிரபாகரன் செயலாளர் ரகுபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டியில், செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பிரியதர்ஷினி, 40 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இம்மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
திருவண்ணாமலை ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுவாமி முத்தழகன் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் வழங்கினார். இந்த பயிற்சியில் 226 ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள பாறையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 40 டன் எடையுள்ள பாறையை அகற்றும் பணியில் திருச்சி குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாக்க வெளியேற்றப்பட்டுள்ளனர். பாறையை உடைக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா அமைப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நடக்கும் நிறை,குறைகளை காவல் கண்காணிப்பாளர் அவரிடம் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட வேலைகளுக்கான தேர்வு நடத்தவுள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் B.E/B.TECH வரை படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஆவணங்களுடன் www.tnprivatejobs.tn.gov.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கரா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.