India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையான காஞ்சி ரோட்டில் உள்ள டீக்கடையில், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் கார்த்தி என்ற வாலிபர் நேற்று (ஜன.24) தகராறு செய்து வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அந்த வாலிபர் தகாத ஆபாசமாக பேசி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதியை தாக்கியுள்ளார். போலீசார் கணபதியை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றலாம். தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மானிய விலையில் தறி உபகரணங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிர் போகவும் வாய்ப்புள்ளது. விழிப்புடன் இருப்பீர்! விபத்தை தவிர்ப்பீர்! என்பதை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளப் பக்கத்தில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தலை கவசம் உயிர் கவசம் என்பதை மறவாதீர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில், இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நேர்த்தியாகவும் திறம்பட செய்து முடித்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய விருது, நாளை (ஜன.25) வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கலெக்டருக்கு விருது கிடைச்சிருக்கு. பாராட்டலாமே.. SHARE பண்ணுங்க
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகா், ஆடையூா், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.25) காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஆரணி நகராட்சியுடன் சேவூர் முள்ளிப்பட்டு இராட்டினமங்கலம் இரும்பேடு பையூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என்ற கிராம மக்களின் கோரிக்கை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் ஆரணி எம்.எல்.ஏ அதிமுக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இன்று மனு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.