India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை காவல்துறை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபருடைய கடவுச்சொல், யூசர் நேம் போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு வெளியிட்டு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சட்டச் சிக்கல்கள் நிறைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்ட தொடரில், தொகுதி நலன் சார்ந்த சில கேள்விகளை மத்திய அரசை நோக்கி முன் வைத்தார். அதில், பள்ளிகளில் பெண்களின் வருகை ஊக்கப்படுத்துவதற்கும், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரம், பாலின உணர்வுத்திறன் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 109 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
செய்யாறு டவுன் சேரன் தெருவைச் சேர்ந்த பாரதி (67), கடந்த 15 ஆண்டுகளாகவே கண் பார்வை குறைபாடுடன் வசித்து வந்துள்ளார். நேற்று (பிப்.6), வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கில் சேலை பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பதிரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் – (08.02.2025) சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, அண்ணா சிலை அருகே நடைபெறும் கண்டன கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி நடத்தி அதற்கான அறிக்கையினை இன்று(பிப்.6) மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என DEO கூறிய நிலையில் பல பள்ளிகள் அவர்களின் அறிக்கையை DEO அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகளை இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஓவியர் ஹரிஷ்பாபு என்பவர் தவெக கட்சியில் பணம் மற்றும் ஜாதி பார்த்து பதவி வழங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவிற்கு அது போன்ற செயலில் நமது கட்சி ஈடுபடவில்லை என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க. SHARE IT.
செங்கம் தாலுகா, புதுப்பாளையம் அடுத்த வீராணந்தல் கிராமத்தை சேர்ந்தவன் வினோத் (26). இவன், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடந்த 5.11.2020 அன்று கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். போக்சோ வழக்கில் கைதான இந்த கொடூரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வினோத் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.