India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் தென்பட்டாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் அல்லது 100 என்ற எண்ணை அழைத்து தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
ஆரணியை அடுத்த கீழ்நகர் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), கணேஷ் (38) இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கீழ்நகர் நோக்கி மொபெட்டில் திரும்பிக் கொண்டிருந்தனர். அரியப்பாடி பகுதியில் வேலூர் சாலையை கடந்தபோது மேல்மருவத்தூர் சென்றுவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்து மொபெட் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெண்ணிலா (57). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் குளத்துமேட்டில் வசிக்கும் ரேவதி (43) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள பேருந்து நிலையத்தில், வரும் 23-02-2025 அன்று காலை 10 மணியளவில், பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதில் தலைமை பயிற்சியாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் கலந்துகொள்ள உள்ளார். இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<
வெறையூர் அருகே உள்ள இசுக்கழிகாட்டேரி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், அவரது மனைவி கவிதா. இவர், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மனைவி ஜெயலட்சுமி என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி, கவிதா வைத்திருக்கும் துணிக்கடைக்கு சென்று ஆபாசமாக பேசி துணிக்கடையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
போளூர் அரசு பெண்கள் பள்ளி அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு வேலன் நகரை சேர்ந்தவர் மகாவள்ளி, தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீழ்நாத்தூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 1/2 பவுன் நகையை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.