India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <
தி.மலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மார்ச்.28-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தி,மலை என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (65), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் மேல்நகர் கிராமத்தில் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சண்முகத்தின் உடலை மீட்டு , விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் பாடகம் பகுதியில் சக்திவேல் என்ற இளைஞர் காவல்துறையில் சேருவதற்காக தனியார் அகாடமியில் பயின்று வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் சக்திவேல் அந்த பெண்ணை காதலிக்க தொடர்ந்து வற்புறுத்துள்ளார். அந்த பெண் மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற சக்திவேல், இறந்த பின் உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
தி.மலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,வட்டாட்சியா் அலுவலக வளாகம்,தி.மலை-606601 என்ற முகவரியில் அணுகலாம்.மேலும்,04175-223030 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். திருவண்ணாமலையை சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அமுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 22). இவர், 15 வயதுடைய 10ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறபடுகிறது. இதுகுறித்த மாணவியின் பெற்றோர் நேற்று (மார்ச்.15) அளித்த புகாரின் பேரில் வந்தவாசி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீசுவரர் கோவில். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு 7 திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து அதன் பின் சாப்பிட வேண்டும். இதே போன்று 7 நாட்களும் செய்யவேண்டும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.