Tiruvannamalai

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர காட்டுத் தீ

image

போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205 மலை கிராமங்கள் உள்ளன. ஜவ்வாது மலை அமைந்துள்ள பகுதி மிக நீண்ட கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதி ஆகும். இந்நிலையில் திடீரென காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ வேகமாக அதிகரித்து வருவதால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீயை உடனடியாக அணைக்க தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 1, 2025

வெந்நீர் பட்டு 2½ வயது ஆண் குழந்தை பலி 

image

வாணாபுரத்தை சேர்ந்தவர் சவுந்தர்-சவுமியா தம்பதியினர், இவர்களுக்கு 2 1/2 வயதில் ராகவன் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தை குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் குழந்தை மீது ஊற்றியுள்ளது. இதில் காயமடைந்த ராகவன் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

News March 31, 2025

மனத்துயரம் நீக்கும் கனக கிரீசுவரர்

image

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் கனக கிரீசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே ஈசனை மனமுருக வேண்டினால் மனத்துயரம் நீங்கும். மேலும், கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு, உத்தியோக உயர்வு கிடைக்க செய்யும் சக்தி வாய்ந்த கோயிலாக உள்ளது. மேலும், இது அனைத்துமே நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிகை தெரிவிக்கின்றனர். மனத்துயரம் உள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 31, 2025

கிரிவல பாதையில் நிர்வாணமாக சென்ற சாமியார்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பாதையில் சாமியார் ஒருவர் நிர்வாணமாக வலம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அவருக்கு புத்தாடை அணிவித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கடத்த சில தினங்களுக்கு முன்பு சாமியார் ஒருவர் குடி போதையில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்தது சர்ச்சையான நிலையில், இந்த சம்பவம் பக்தர்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.<> ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

நிலத் தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

image

ஆரணி அருகே மெய்யூர் கிராமத்தில் நிலத்தகராறில் சேகர்(55), வசந்தம்மாள்(45), குமரேசன்(30), லோகேஷ் (25) உள்ளிட்டவர்களை அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 31, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.…என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்களை கண்டால் 100 டயல் செய்யவும்.

News March 30, 2025

தி.மலையில் உதயமாகும் 2 புதிய நகராட்சிகள்

image

தமிழ்நாட்டில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் 2 புதிய நகராட்சிகள் உதயமாவதை பற்றி உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க. மறக்காம தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!