Tiruvannamalai

News April 2, 2025

தமிழில் பெயர் பலகை கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி 

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் மே.15க்குள் இதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டல சொல்லுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள். 

News April 2, 2025

தி.மலை: எழுத்தாளா் உடல்நலக் குறைவால் காலமானார்

image

திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் (ஏப்ரல் 1)நேற்று காலமானாா். இவரது தமிழ்ப் பணியை பாராட்டி தமிழக அரசு அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதை வழங்கியது. இவருக்கு மகன் மணிமாறன், மகள் உமாதேவி ஆகியோர் உள்ளனர். ந.சண்முகத்தின் இறுதி சடங்கு திருவண்ணாமலையில் புதன்கிழமை (ஏப்.2) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <>ஷேர் பண்ணுங்க<<>>

News April 2, 2025

சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

image

“தமிழ்நாட்டில் 77 சுங்கச் சாவடிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 13 காலாவதியானதால் கட்டணத்தைக் குறைக்க கடிதம் எழுதினேன். அதற்கு, ‘சுங்கச்சாவடி காலாவதியாகிவிட்டது என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்’ என ஒன்றிய அரசு தெரிவித்தது. எனினும், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

News April 2, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு வேலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 செவிலியர் பணியிடங்களுக்கு நாளைக்குள் (ஏப்.3) விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ நர்சிங் படித்த 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள். சம்பளம் ரு.18000. <>இங்கே Click செய்து <<>> விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசு வேலைக்கு இது ஓர் அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. SHARE TO FRIENDS

News April 2, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

தி.மலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 1, 2025

உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் சிறந்த தலம்

image

தி.மலை மாவட்டம், தி.மலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இது தி.மலையின் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 1, 2025

அடையாள எண் பெற பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 1061 கிராமங்களிலும் நில உடைமைகளை சரிபார்த்தல் பணிகள் 8.2.2025 முதல் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தனித்துவமான அடையாள எண் பெற மார்ச் 30ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. நிலையில் தற்போது வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

JUST IN: கிணற்றில் மூழ்கி மாணவிகள் 2 பேர் பலி

image

ஆரணி அடுத்த சதுப்பேரி பாளையம் கிராமத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் நீச்சல் பழகுவதற்காக கிணற்றில் இறங்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் அக்கம் பக்கத்தினரால் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், நாளை இருவரும் ஆங்கில பொதுத்தேர்வு எழுதவிருந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

error: Content is protected !!