Tiruvannamalai

News April 9, 2025

திருவண்ணாமலையில் தமிழ் கட்டாயம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

image

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 8, 2025

10ம் வகுப்பு கணித தேர்வு 609 மாணவர்கள் ஆப்சென்ட்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 499 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 147 மையங்களில் கணித பொதுத்தேர்வு நேற்று எழுதினர்.இதில் தேர்வு எழுத 30 ஆயிரத்து 635 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 30 ஆயிரத்து 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 609 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மாணவர்களுக்கான அறிவியல் பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.

News April 8, 2025

அட இவங்க எல்லாரும் திருவண்ணாமலை காரர்களா?

image

அந்தோணி அமல்ராஜ் – மேசைப் பந்தாட்ட வீரர். அருணகிரிநாதர் – முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர். பதஞ்சலி சாஸ்திரி – இந்தியாவின் இரண்டாவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இராசாம்மள் தேவதாசு – இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர். பவா செல்லதுரை – எழுத்தாளர், நடிகர். நித்தியானந்தம் – ஆன்மிகவாதி. கிருஷ்ணமூர்த்தி – நடிகர். உங்களுக்கு தெரிந்த தி.மலை பிரபலங்களை கமெண்ட் செய்யவும். ஷேர்

News April 8, 2025

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (25).கராத்தே மாஸ்டரான இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்த வழக்கிற்கான விசாரணை நேற்று தி.மலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரவீன் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 7, 2025

தி.மலையை 2ஆக பிரிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

image

தி.மலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக தி.மலை உள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ள தி.மலையை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கருத்து என்ன?.

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

News April 7, 2025

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

image

நாட்டேரி கிராமத்தைச் சோர்ந்தவர் ஜெயலட்சுமி (35). இவரது மகன் நவீன்குமாா் (17). இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை இவர் தாய் கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமாா், நேற்று (ஏப்ரல்.06) வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!