India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒன்றியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி பணியாளர்களின் பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஓய்வுதியும், பணிக்கொடையாக பணியாளருக்கு 10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சமும் வழங்க தமிழக அரசுக்கு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தஹஜிம் பானு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ் அணைக்கரை எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நாளை (13-09-2024) முதலமைச்சர் கோப்பைக்கான தி.மலை மாவட்ட அளவிலான பெண்கள் கேரம் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் 3- இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த 300 மாணவிகள் பங்கு பெற உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் பொதுமக்கள் குறைவுதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் அளித்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவரங்களை கேட்டறிந்தார்.
நல்லவன் பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற இருப்பதால் நல்லவன் பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம் ,கீழ்நாத்தூர்,பைபாஸ் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின்தடை உள்ளது.தச்சூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம்,நடுப்பட்டு, தெள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை.
திருவண்ணாமலையில் கட்டுமானப் பணிக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போய்விட அவர்களை கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளரிடம் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று புகாரளித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள், சமூக முன்னணி அமைப்புகள், மற்றும் பொறுப்பாளர்கள் காவல்துறையுடன் பேசினர். காவல்துறை அவர்கள் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதியாக வந்தவாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி செந்தில்குமார் அவர்களை பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்து சென்னை ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் செந்தில்குமார் அவர்கள் போளூர் சார்பு நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி செய்யார் பகுதியில் அதிமுக வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புதிய உறுப்பினர் அட்டை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மேசைப்பந்து போட்டியில் எஸ் முருகையன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரட்டையா் மற்றும் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர் செங்கம் கிரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டுசாலையில் இன்று பயணிகளை இறக்கிக்கொண்டு இருந்த அரசு பேருந்தின் மீது பின்னால் வந்த லாரி பேருந்தின் பின்பக்கம் மற்றும் அருகே இருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ட்ரைவர், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி மற்றும் பெண் உட்பட 3 நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்தும், லாரியும் பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.