Tiruvannamalai

News September 14, 2024

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி செப்டம்பர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:27 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 14, 2024

திருவண்ணாமலை அருகே கோவில் சுற்றுச்சுவர் அகற்றம்

image

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு-மணலூா்பேட்டை சாலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் சுற்றுச்சுவா் அகற்றப்பட்டது. கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிா்ப்புத் தெரிவித்தனர். பின்னர், நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

News September 14, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப். 17-ஆம் தேதி நபி தினத்தையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. இந்த விடுமுறையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுமானால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

News September 14, 2024

பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கிரிவலம் மாதம் மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 11.27 முதல் 18.09.2024 காலை 9.10 வரை உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

image

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் 41. இவர் சேத்துப்பட்டு பகுதியில் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் அழைத்து சென்றபோது 9ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். போளூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் இன்று இன்ஸ்பெக்டர் அல்லி ராணி ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் போக்சோ வழக்கில் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 13, 2024

பள்ளி மாணவிகளுடன் உணவருந்திய ஆட்சியர்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த மாணவிகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (13.09.2024) மதிய உணவினை வழங்கி, அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினர்.

News September 13, 2024

சிறப்பு மருத்துவ முகாமில் 248 கோரிக்கை மனுக்கள்

image

தி.மலை கலெக்டர் அலுவலக அலுவலக வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கேட்டு 248 பேர் மனு அளித்தனர். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 13, 2024

போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் முருகா படி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், இன்று மதுரை வழக்கறிஞர் தாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் கூட்டு குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று நாள் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 தோ்வு மையம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில், சனிக்கிழமை நடைபெறும் குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை 21,660 போ் தோ்வு எழுதுகின்றனா். முதல்நிலைத் தோ்வுசனிக்கிழமை (செப்.14) நடைபெறுகிற உள்ள நிலையில் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

News September 13, 2024

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2025-ம் பருவத்தில் மாணவர்கள் 8-ம் வகுப்பு சேருவதற்கான தேர்வு நாட்டில் சில மையங்களில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை www.rimc.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.