Tiruvannamalai

News September 17, 2024

திருவண்ணாமலையில் ஆளுநர் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கும் அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
கைலாஷ்நாதன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

News September 17, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தீர்வு அளிக்கும் வகையில், வேளாண் துறை, கால்நடை, வங்கி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர் . விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

News September 17, 2024

தி.மலை: சிறப்பு இரயில்கள் இயக்கம்

image

தி.மலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்கள் வசதிக்காக 2 சிறப்பு ரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது. சிறப்பு இரயில்கள் விழுப்புரத்திலிருந்து இன்று காலை 9.15 மணிக்கும், இரவு 9.15 மணிக்கும் புறப்படும். அதேபோல், தி.மலையில் இருந்து நாளை பிற்பகல் 12.40 மணிக்கும், புதன்கிழமை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2024

தி.மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

பௌர்ணமி தினமான நாளை திமலை கிரிவலம் செல்ல பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கபடுகிறது.

News September 17, 2024

தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16.09.2024) வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு 2024 முன்மொழிவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வார்கள். இதனையொட்டி, புரட்டாசி மாத பௌர்ணமி நாளை காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

News September 16, 2024

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

image

கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய போது தென்பள்ளிப்பட்டு அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருக்கோவிலூர் ஊராட்சி ஊத்து கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 16, 2024

தி.மலையில் மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை-2024 க்கான ப‌ல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, திருவண்ணாமலை மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி இன்று (16-09-2024) நடைபெற்றது. இதில் ஏராளமான பளுதூக்கும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டியில் பங்கு பெற்றனர்.

News September 16, 2024

திருவண்ணாமலையில் தேதி மாற்றம்

image

தி.மலை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 17 நடைபெற இருந்த கல்லூரி மாணவிகளுக்கான ஹேண்ட் பால், கையுந்து பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, தடகளம், கேரம் ஆகிய போட்டிகள் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தி.மலை மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா அறிவித்துள்ளார். அரசு விடுமுறை காரணமாக மாற்றம் எனவும் அறிவிப்பு.

News September 16, 2024

தி.மலை அருகே 48.5 லட்சம் பணம் பறிமுதல்; இருவர் கைது

image

வந்தவாசி பெட்டி நாடு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (51).இவர் சட்டவிரோதமாக இணையவழியில் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கணினி மூலம் சூதாட்டம் நடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து மடிக்கணினி, 6 கைபேசிகள், 48.5 லட்சம் பணம், 82 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்து, செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிமையும் (44) போலீசார் கைது செய்தனர்.