Tiruvannamalai

News March 2, 2025

முதல்வர் பிறந்த நாள் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர்

image

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு சென்னை தெற்கு மாவட்டம், சைதை மேற்கு பகுதி 140 வது வட்ட, தி.மு.க சார்பில் (மார்ச்01) நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 8073 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

News March 2, 2025

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல்

image

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது வீட்டில் அரசு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷின் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2025

இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

image

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிலையை நிர்ணயம் செய்து உத்தரவிட்டார். பெல்ட் வகை அறுவடை ரூ.2,500, 2 வீல் டிரைவ் டயர் வகை அறுவடை ரூ.1,700, மற்றும் 4 வீல் டிரைவ் டயர் வகை அறுவடை ரூ.2,100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகைக்கு மேலாகக் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தகவல்கள் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

News March 1, 2025

விவசாயிகளுக்கு ₹88.50 கோடி இழப்பீடு வழங்க அரசு அனுமதி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₹88.50 கோடி நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 58,273 எக்டர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டதை கண்டறியப்பட்டு, ₹88.50 கோடி நிவாரணம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 75 விவசாயிகள் பயனடைய உள்ளனர். விவசாயிகளின் பட்டியலை வேளாண் அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News March 1, 2025

குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 1, 2025

இரு ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் 

image

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை குறித்து கலந்தாய்வு செய்தார். இந்த கலந்தாய்வில் செ.நாச்சிப்பட்டு கிராம ஊராட்சி செயலர் சௌந்தரராஜன், தி-மலை ஒன்றியம் கண்டிக்குப்பம் கிராம ஊராட்சி செயலர் தவமணி இருவரும் கிராம வரவு செலவு கணக்கில் வராததை கண்டறிந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.

News March 1, 2025

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தை சாவு

image

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி வரதராஜன், இவரது 2 1/2 வயது குழந்தை கடந்த 17ஆம் தேதி வெந்நீரில் அமர்ந்ததால் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2025

வாணாபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

image

வாணாபுரம் பகுதியில் கிணற்றில் குளிப்பதற்காக இறங்கிய வெங்கடேசன் என்ற தொழிலாளி, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணாபுரம் போலிசார் விசாரணை

News February 28, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்களை (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News February 28, 2025

பாஸ் வழங்குவது குறித்து நாளை சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாட வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. எனவே, மாட வீதியில் வசிப்பவர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, நாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!