Tiruvannamalai

News March 3, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

News March 3, 2025

தி.மலை மாவட்டத்தில் 390 பேர் தேர்வு எழுதவில்லை

image

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இன்றைய முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மொழிப்பாடம் மற்றும் பிற மொழிகளை தேர்வு செய்து உள்ள மாணவர்கள் மொத்தம் 390பேர் இன்றைய தேர்வை எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான காரணங்கள் ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 3, 2025

வந்தவாசி அருகே மணல் கடத்திய வாலிபர் கைது  

image

வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் சுகநிதியில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் எடுத்து கொண்டிருந்த 2 பேரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடிக்க முயன்றனர் .பொக்லைன் எந்திரத்தை அங்கேயே விட்டு 2 பேர் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பிடிபட்டவர் சாலைவேடு கிராமத்தை சேர்ந்த மதன்(25) என்பது தெரியவந்தது. பின்னர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

News March 2, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

செங்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் சாவு

image

செங்கம் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி (60). இவரின் மகன் சின்னமணி (34), விவசாய கூலியாக வேலை பார்த்தவர், வேலைக்கு சென்ற பிறகு காணாமல் போனார். பின்னர், அவர் சாலையோர பாலத்தில் இறந்த நிலையில் கிடந்தது உறுதியாகியது. இந்த தகவலை அறிந்ததும், அவரது தாய் சாந்தி அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

திருவண்ணாமலையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 95 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

News March 2, 2025

டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

image

ஆரணியைச் சேர்ந்தவர் பழ வியாபாரி சூர்யா, 30. இவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் ஒன்றும் பிரச்னை இல்லை; வீட்டிற்கு செல்லுங்கள்’ என கூறி உள்ளனர். பின்னர் அடுக்கம்பாறை மருத்துவமனை செல்லும் வழியிலேயே சூர்யா பலியானார். எனவே டாக்டர்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News March 2, 2025

முதல்வர் பிறந்த நாள் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர்

image

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு சென்னை தெற்கு மாவட்டம், சைதை மேற்கு பகுதி 140 வது வட்ட, தி.மு.க சார்பில் (மார்ச்01) நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 8073 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

News March 2, 2025

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல்

image

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது வீட்டில் அரசு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷின் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!