Tiruvannamalai

News September 27, 2024

தி.மலையில் 61.7 மி.மீ மழை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 61.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கலசப்பாக்கம் 17 மி.மீ, குறைந்தபட்சமாக செய்யார் 1 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 12 மி.மீ, தண்டராம்பட்டு 11 மி.மீ, போளூர் 7.5 மி.மீ, திருவண்ணாமலை 6.6 மி.மீ, செங்கம் 2.2 மி.மீ, வெம்பாக்கம் 2.0 மி.மீ, சேத்பட் 1.4 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.

News September 27, 2024

ஊரக வேலைத் திட்டம், மண் வரப்பு அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தனிநபர் நிலங்களில் மரம் நடுதல், மண் வரப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் செய்ய செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். விவசாயி சான்றிதழ், நில ஆவணங்கள், ஆதார், பணி அடையாள அட்டை, வங்கி கணக்கு நகல்கள் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

News September 27, 2024

அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.5 கோடி காணிக்கை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கையில் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் 338 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும், ரூ.3.5 கோடி ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

News September 27, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 26, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி

image

தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை & தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்கல்வி பயில்வதற்கான அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (26.09.2024) ஆலோசனை வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 26, 2024

அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.5 கோடி காணிக்கை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பவுர்ணமி உண்டியல் எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் 338 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும், 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரூபாய் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

News September 26, 2024

தி.மலை: உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

image

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி இன்று (26.09.2024) நடைபெற்று வருகின்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 26, 2024

இலவச பாஸ் கேட்டு போராட்டம்

image

செங்கம் அருகே புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கரியமங்கலம், கொட்டகுளம் பகுதிகளிலிருந்து டாட்டா ஏசி வாகன உரிமையாளர்கள் இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து
15க்கும் மேற்பட்ட டாடா ஏசி பிக்கப் உள்ளிட்ட வாகனங்களுடன் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சுங்கச் சாவடி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 26, 2024

தி.மலையில் 81 ஆயிரம் மனுக்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 81 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு மனுக்களின் அடிப்படையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பதாகவும் இதில் 90 % மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மனுக்கள் இந்த மாதத்தில் தீர்வு காணப்படும் எனவும் 50,000 சாதி சான்றிதழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

இளம்வயது திருமணத்துக்குச் சென்ற அனைவா் மீதும் நடவடிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடத்தினால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் போலீசால் FIR பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார். இளம் வயது திருமணங்களை 1098 எண்ணில் புகார் செய்யலாம் என்றும், அதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.