Tiruvannamalai

News April 24, 2024

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 23-ம் தேதி மூடப்படும். என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 22, 2024

கட்டணமில்லா பேருந்தில் கட்டுக்கடங்காத கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும் நிலையில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்தில் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிகளுக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும் செல்ல கட்டுக்கடங்காத பெண்கள் கூட்டம் பேருந்து இடம் பிடிக்க முண்டியடித்து பேருந்தில் ஏறிக்கொண்டு இருக்கின்றனர்.

News April 21, 2024

தி.மலையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட், 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

News April 21, 2024

தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

சித்ரா பவுர்ணமி வரும் 23ஆம் தேதி காலை 4.16 மணிக்கு தொடங்கி ஏப்.24ஆம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 23ஆம் தேதி முழுமையாக பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News April 21, 2024

தி.மலை: உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம்

image

செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(28). இவருக்கு திருமணமாகி ரவீனா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பெரியேரி வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

சித்ரா பௌர்ணமிக்கு 910 சிறப்பு பேருந்துகள் 

image

தி.மலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு ஏப்ரல் 22, 23 தேதிகளில் மாதவரத்தில் இருந்து தலா 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

News April 20, 2024

தி.மலையில்106.88 டிகிரி பாரன்ஹீட்

image

தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 106.88 டிகிரி பாரன்ஹீட் 41.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

தி.மலை அருகே தீ விபத்து

image

சேத்துப்பட்டு அடுத்த பருத்திப் கிராமத்தில் இன்று அதிகபடியான வைக்கோலை ஏற்றிச்சென்ற டிராக்டரில் மின் கம்பியில் வைக்கோல் உரசி திடீரென தீ பற்றியது. உடனடியாக கிராம பஞ்சாயத்து தலைவர் ப.ரவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

News April 20, 2024

தி.மலை: பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

image

தி.மலை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இன்று(ஏப்.20) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில், பொது
மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள
பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

News April 20, 2024

தி.மலை: பலத்த பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள்!

image

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து தி.மலை தேர்தலில் பயன்படுத்திய 1,722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆரணி தொகுதியில் பயன்படுத்திய 1,760 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தி.மலை சண்முகா மேல்நிலைப் பள்ளியிலும் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!