India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தி.மலை மாவட்டம் இஞ்சிமேடு பகுதியில் மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. நவபாஷாண லிங்கமாக அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

தி.மலை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

தி.மலை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

தி.மலை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முத்து (51) இவர் தி.மலையில் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக இவர் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தனது நண்பர் ஊரான செய்யாறு வட்டம் கீழ்நீர்குன்றம் கிராமத்தில் கூலி வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.