Tiruvannamalai

News April 25, 2024

திருவண்ணாமலையில் நெரிசல்

image

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தது.

News April 25, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களில், முறையாக அன்னதானம் வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 24, 2024

தி.மலை: ஆட்சியர் திடீர் ஆய்வு

image

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News April 24, 2024

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், பிஸ்கட், வாழைப்பழம், புளியோதரை, தர்பூசணி பழம், பிரசாத லட்டு மற்றும் பிரசாதம் வழங்கினார்.

News April 24, 2024

கட்டுப்பாட்டு அறையில் அதிரடி ஆய்வு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் க.ச.நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

News April 24, 2024

சிறப்பு இரயில் இயக்கம்

image

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக  மெமு சிறப்பு ரயில், ஏப்.23ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தி.மலையை சென்றடையும். தி.மலை-சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில் தி.மலையில் இருந்து ஏப்.24ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு, கோயிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 24, 2024

திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 24, 2024

திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

தி.மலையில் 5000 போலீசார் குவிப்பு

image

சித்ரா பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பாதுகாப்புப் பணியில் 5000 போலீசார், 184 தீயணைப்பு வீரா்கள் மற்றும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனோடு, 15 தீயணைப்பு வாகனங்கள் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

error: Content is protected !!