India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பியபோது கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், துலாபள்ளி என்ற இடத்தில் நேற்று மாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மைனர் கவின் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, செங்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சைல்ட் லைனில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தி.மலை, வந்தவாசி அடுத்த சேதாரம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வந்தவாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தரப்பிற்கு ஆதரவாக பாலமுருகன் போலீசாரிடம் தகராறு செய்தார். பின்னர் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
தி.மலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பைபாஸ் சாலையில் காய்கறி மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இன்று(மே 15) மொத்த விற்பனை கடைகளுக்கு வந்த வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்குவதில் கூழி தொகையை உயர்த்தி கேட்டதால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்காமல் உள்ளனர்.
‘108 ஆம்புலன்ஸ்’ சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், மே 17 அன்று தி.மலையில் நடைபெறுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். ஓட்டுநருக்கு கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. மருத்துவ உதவியாளருக்கு நர்சிங் அல்லது ANM, DMLT. உரிய சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் மாவட்டத்தில் தி.மலை, செய்யாறு, ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை மே 10 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Sorry, no posts matched your criteria.