Tiruvannamalai

News May 22, 2024

தி.மலை முன்னாள் படைவீரா்கள் கவனத்திற்கு..!

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவர்களை சார்ந்தோரின் மகன், மகள்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் சேருவதற்கான முன்னுரிமை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதியான முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள், மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 21, 2024

தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

image

கீழ்பென்னாத்தூர் வட்டம் தளவாய் குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோணலூர், நாடழகானந்தல் உள்ளிட்ட பகுதியில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையால் மதியம் 2 முதல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இன்று கோணலூர் கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறுவதால் இந்த தொடர் மின்வெட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

News May 21, 2024

குமர கோயில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

image

திருவண்ணாமலை காமராஜ் சிலை அருகில் குமர கோவில் தெருவில் உள்ள முருகனுக்கு காலை அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. செவ்வாய் தோறும் முருகனுக்கு தவறாமல் பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம் நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வணங்கி அர்ச்சனை செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 21, 2024

பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல்

image

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாட்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரையும் , உண்ணாமுலையம்மன் வழிபட்டுச் செல்கின்றனா். இந்நிலையில் நாளை வைகாசி மாதப் பெளர்ணமியை முன்னிட்டு, கோயில் சுற்றிலும் பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

News May 21, 2024

தி.மலை: மாமியார் கொலை – மருமகளுக்கு ஆயுள் தண்டனை

image

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆதிலட்சுமியை கூலிப்படை வைத்து அவரது மருமகள் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சத்யாவின் அண்ணன் பிரபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண்,பத்ரிநாராயணன், முகமது அலி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்துள்ளார்.

News May 21, 2024

தி.மலை அருகே திருட்டு

image

திருவண்ணாமலை அடுத்த செல்வ விநாயகர் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி மகன் ஆனந்தன் என்பவர் வீட்டில் 9. 5 பவுன் நகை மற்றும் 4,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ஆனந்தின் தந்தை சுந்தரமூர்த்தி கொடுத்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களால் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

News May 20, 2024

நடிகை ரோஜா அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்

image

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி வேட்பாளரும், நடிகையுமான ரோஜா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு ரோஜா பேட்டி அளித்தார்.

News May 20, 2024

தவறி விழுந்து ஓட்டுநர் பலி

image

உத்திரமேரூர் களியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் குமார். இவர் நேற்று வந்தவாசி அடுத்த ஆர்யாத்தூர் கிராமத்தில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு சாலை ஓரம் உள்ள சிறு பாலத்தின் மீது மது போதையில் உறங்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 20, 2024

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கு குவியும் பாராட்டு

image

செய்யாறு அருகே அரசு பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட மூன்று சவரன் தங்க நகையை நடத்துனர் வரதராஜன் என்பவர் செய்யாறு பணிமனை கிளை மேலாளர் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து நகையின் உரிமையாளர் விஜயபாலனிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

News May 20, 2024

புதுப்பொலிவுடன் காணப்படும் ரயில் நிலையம்

image

திருவண்ணாமலை மாவட்டம் ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ரயில் நிலையம் செல்லும் வழி பள்ளம் நோண்டப்பட்டு மணல்மேடுகளாக காட்சி அளிக்கப்பட்டது. அவ்வழியே செல்ல மிக கடினமாக இருந்தது. தற்போது திருவண்ணாமலை ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.

error: Content is protected !!