Tiruvannamalai

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

பாம்பு கடியால் 7,300 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தி மட்டும் 630 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு 19.795 பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு இதன் சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

News July 19, 2024

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தலைமையில்  நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த இக்கூட்டத்தில் அலோசனை மேற்கொள்ளப்பட்டது. இ‌தி‌ல் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில், மிதமான மழை செய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 18, 2024

திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸின் தள்ளுபடி

image

தி.மலை, திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆடி சிறப்பு தள்ளுபடியாக 2 சேலை/வேட்டி வாங்கினால் 1 சேலை/வேட்டி இலவசமாக வழங்கப்படும். குறிப்பிட்ட ரகங்களுக்கு 40% முதல் 70% தள்ளுபடி வழங்கப்படும். மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை ஆகஸ்ட் 16 வரை வழங்கப்படுமென முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை,தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு துணிகர செயல்கள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியுடையவர்கள் http://awards.tn.gov.in-ல் பதிவு செய்யலாம். உரிய ஆவணங்கள், சுயவிவரத்துடன் மாவட்ட சமூகநல அலுவலர், ஆட்சியர் அலுவலகம், வேங்கிக்கால், தி.மலை என்ற முகவரியில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற (21.07.2024) அன்று தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் நடைபெறுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

தி.மலை:கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காததை போன்ற காரணங்களால் நிலுவையுள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுமாறு தெரிவித்தார். உதவித்தொகை ரூ.4000 என நிர்ணயிப்பு.

News July 17, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!