India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்தம் தேவைப்படும் மாணவர்கள் தற்போதைய மதிப்பெண் சான்றிதழ் நகலில் கையெழுத்திட்டு தலைமையாசிரியர் மூலமாக மாவட்ட தேர்வு அலுவலகத்தில் ஜூன்.12 க்குள் ஒப்படைக்க வேண்டும்.
தி.மலை மாவட்டம் பிற்பட்டோர் நலத்துறையால் செயல்படும் 49 விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 16-06-24 தேதி வரையிலும், விடுதியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15-07-24 வரையிலும் விண்ணப்பத்துடன் வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழுடன் பிற்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டுமென ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், 3,545 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,049 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை தற்போது ரூ.16,000 முதல் ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் சன்மானம் உயர்த்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் சேகர் என்பவர் வீடு கட்டுவதற்காக தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை எழுதி தருமாறு பிரச்னை செய்துள்ளார். பின்னர், முத்துவை சரமாரி தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை சன்னதி வீதியில் விடுமுறை நாளான இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் புறங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை புரிந்ததை ஒட்டி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார்கள் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக படையெடுத்து கொண்டு இருந்ததால் பெரும் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 10) முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும். இதேபோல, மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 19 முதல் 28 வரை ஜமாபந்தி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இதில், அந்தப்பகுதி மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு சேர விரும்பும் மாணவர்கள் இன்று ஜூன் 7 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதை ஒட்டி மாணவர்கள் சேர்க்கையினை கருத்தில் கொண்டு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கால நீட்டிப்பு அவகாசம் வழங்கியது.
Sorry, no posts matched your criteria.