Tiruvannamalai

News June 9, 2024

குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

image

செய்யாறு, நெடும்பிறை கிராமத்தில் உள்ள குளத்தில் விடுமுறை தினமான இன்று ஐந்து சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில் நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்த பரத் குமார், சந்தோஷ் குமார் மற்றும் செய்யாறு நகரைச் சேர்ந்த சாய்சரண் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 9, 2024

ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்தம் தேவைப்படும் மாணவர்கள் தற்போதைய மதிப்பெண் சான்றிதழ் நகலில் கையெழுத்திட்டு தலைமையாசிரியர் மூலமாக மாவட்ட தேர்வு அலுவலகத்தில் ஜூன்.12 க்குள் ஒப்படைக்க வேண்டும்.

News June 9, 2024

திருவண்ணாமலை: விடுதிகளில் மாணாக்கர்கள் சேர்க்கை

image

தி.மலை மாவட்டம் பிற்பட்டோர் நலத்துறையால் செயல்படும் 49 விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 16-06-24 தேதி வரையிலும், விடுதியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15-07-24 வரையிலும் விண்ணப்பத்துடன் வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழுடன் பிற்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டுமென ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

News June 9, 2024

தி.மலை: 2, 049 வழக்குகளுக்கு தீா்வு

image

திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், 3,545 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,049 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News June 9, 2024

தி.மலை: ஊதிய உயர்வு அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை தற்போது ரூ.16,000 முதல் ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் சன்மானம் உயர்த்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 9, 2024

கலசப்பாக்கம்: தந்தை அடித்து கொலை

image

கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் சேகர் என்பவர் வீடு கட்டுவதற்காக தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை எழுதி தருமாறு பிரச்னை செய்துள்ளார். பின்னர், முத்துவை சரமாரி தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News June 9, 2024

தி.மலை மாவட்டத்தில் 267 தேர்வு மையம்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

News June 8, 2024

தி.மலை: சன்னதி தெருவில் போக்குவரத்து பாதிப்பு

image

திருவண்ணாமலை சன்னதி வீதியில் விடுமுறை நாளான இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் புறங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை புரிந்ததை ஒட்டி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார்கள் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக படையெடுத்து கொண்டு இருந்ததால் பெரும் கூட்டம் அலைமோதியது.

News June 8, 2024

தி.மலை: ஜூன் 10 முதல் குறைதீா் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 10) முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும். இதேபோல, மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 7, 2024

தி.மலையில் ஜமாபந்தி அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 19 முதல் 28 வரை ஜமாபந்தி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இதில், அந்தப்பகுதி மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!