India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர், மாவட்டக் அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ மாவட்ட எல்லையில் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று விசாரித்தாா் .
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9: 00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நல்லவன்பாளையம், தேனி மலை, அண்ணாநகர், எடப்பாளையம், வேல் நகர், கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளனர்.
போளூர் அடுத்த பெண்மணி கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல். இவர் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் பசுமாட்டை கட்டுவதற்கு நிலத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை பசு மாடு மிதித்து மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளது. பசுமாட்டை காப்பாற்ற முயன்ற ஜெயவேல் மீது மின்சாரம் பாய்ந்து பசுமாடு மற்றும் ஜெயவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருவண்ணாமலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண்ணை தி.மலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கும் துறை தெரிவித்துள்ளது.
தி.மலை மாவட்டம், தெள்ளாரை சேர்ந்த தாய் தந்தையை இழந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாட்டு செலவிற்காக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் இன்று நிதி உதவி வழங்கினர். இந்நிகழ்வில், தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் T.D.ராதா, வந்தவாசி நகர செயலாளர் A.தயாளன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்யாறு டவுன் வெங்கட்ராமன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டில் உள்ள ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் காமராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீசார் உடல் கருகிய நிலையில் இருந்த காமராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வந்தவாசி அருகே வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எட்டியப்பன் -ஆதிலட்சுமி தம்பதி. நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் கீழ் கொடுங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை
மகாத்மா காந்தி போல் வேடமிட்டு முதியோர் ஒருவர் திருவண்ணாமலை முக்கிய வீதிகளில் மௌனமாக நடந்து சென்றார். அவர் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை விருப்பப்பட்டவர்கள் அளிக்கும் உதவிகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். வயது வித்தியாசம் இல்லாமல் அருகில் வந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.