India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கிரிவலத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நேற்று நாள் முழுவதும் காத்திருந்தனர். பகலில் கடும் வெயில் கொடுமையால் பக்தர்கள் கால் சூடு தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குருவிமலை கிராமம் அருகே நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் செல்வதற்காக ஆந்திராவில் இருந்து காரில் வந்தவர்கள் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போளூர் வட்டம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கம்மனந்தல் பகுதியில் உள்ள 80 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று நேற்று (ஜூன் 21) மாலை 6 மணி அளவில் பலத்த காற்று வீசியதில் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நெல் அறுவடை இயந்திரத்தின் நெல் சேமிக்கும் பெட்டி மீது விழுந்ததால் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து அதனை ஊராட்சி பணியாளர்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
திருவண்ணாமலையில் இன்று (ஜூன் 21) பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06127) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து நாளை (ஜூன் 22) காலை 8 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் அளிக்க அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, ஆதார் அட்டை வழங்க முகாம் ஜூன் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
தி.மலை மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ள கரும்பை விவசாயிகள் பதிவு செய்யலாம். வேர்ப்புழு தாக்குதலில் கரும்பை பாதுகாக்க மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய விவகார எல்லை பகுதியில் கரும்பு சாகுபடி செய்து ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பை 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணி 60.80 மி.மீ, திருவண்ணாமலை 8 மி.மீ, செங்கம் 26.4 மி.மீ, போளூர் 20 மி.மீ, ஜமுனாமரத்தூர் 37 மி.மீ, கலசபாக்கம் 10 மி.மீ, தண்டராம்பட்டு 14.2 மி.மீ, செய்யாறு 48மி.மீ, வந்தவாசி 54 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 9 மி.மீ, வெம்பாக்கம் 28 மி.மீ, சேத்துப்பட்டு 19 மி.மீ. பதிவானது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 7.31மணிக்கு தொடங்கி ஜூன் 22 காலை 6.37 மணிக்கு முடிவடையும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 1200 சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேடு, கிளம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 7.31மணிக்கு தொடங்கி ஜூன் 22 காலை 6.37 மணிக்கு முடிவடையும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 1200 சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேடு, கிளம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.