Tiruvannamalai

News June 24, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தி.மலை மாவட்டம், சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் அமைப்புச் சாரா நிறுவனங்களில் பணிபுரியாத ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறலாம்‌. ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 24, 2024

குப்பைக்காடாக காட்சியளிக்கும் கிரிவலப் பாதை

image

பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காகிதங்கள், டம்ளர்கள், இளநீர் ஓடுகள் போன்றவைகள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராது சுத்தம் செய்து வருகின்றனர். தி.மலை வரும் பக்தர்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சிதற விடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

News June 24, 2024

தி.மலை அருகே 6 பேர் கைது

image

தி.மலை மாவட்டம், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆரணி தாலுகா மற்றும் சந்தவாசல் பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பையூர் கிராமம் சிவக்குமார் (35), ராமதாஸ் (35), வேண்டா (45), சாந்தி (53), வனிதா (49), படவேடு தயாளன் (40) ஆகியோரிடம் பதுக்கி வைத்திருந்த 80 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News June 23, 2024

தி.மலையில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

தி.மலை: 2ஆம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூன் 24) முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது இந்த கலந்தாய்வில் மாணவ , மாணவிகள் காலை 9 மணிக்குள் வரவேண்டும் அனைத்து பாடப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் கலைவாணி தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

மாரியம்மன் கோயிலில் சிகை ஏலம்

image

செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் நீக்கிய சிகை சேகரிப்பு உரிமம் ஏலம் வரும் 27ஆம் தேதி  காலை 11 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஆய்வாளர் முன்னிலையில் திருவண்ணாமலை, காந்திநகர், இணை ஆணையர் அலுவலகத்தில் நிபந்தனைகளுடன் நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.

News June 22, 2024

திருவண்ணாமலையில் இரவு மழை பெய்ய வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News June 22, 2024

திருவண்ணாமலை: பக்தர்கள் கோரிக்கை

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கிரிவலத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நேற்று நாள் முழுவதும் காத்திருந்தனர். பகலில் கடும் வெயில் கொடுமையால் பக்தர்கள் கால் சூடு தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

News June 22, 2024

கிரிவலம் வந்தவர்கள் விபத்தில் பலி

image

கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குருவிமலை கிராமம் அருகே நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் செல்வதற்காக ஆந்திராவில் இருந்து காரில் வந்தவர்கள் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News June 22, 2024

வேருடன் சாய்ந்த 80 ஆண்டு பழமையான ஆலமரம்

image

போளூர் வட்டம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கம்மனந்தல் பகுதியில் உள்ள 80 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று நேற்று (ஜூன் 21) மாலை 6 மணி அளவில் பலத்த காற்று வீசியதில் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நெல் அறுவடை இயந்திரத்தின் நெல் சேமிக்கும் பெட்டி மீது விழுந்ததால் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து அதனை ஊராட்சி பணியாளர்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!