Tiruvannamalai

News June 25, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 28ஆம் தேதி 265 பேருந்துகளும், ஜூன் 29ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

கோழி வளர்க்க 50 சதவீத மானியம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கிராம பகுதிகளில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுகோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமும் உள்ள பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் ஜூலை.5 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

தி.மலை எம்.பி ஆனார் அண்ணாதுரை

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரை இன்று எம்.பியாக பதவியேற்றார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அண்ணாதுரை, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

ஆரணி: தம்பதி மர்ம மரணம்

image

ஆரணி அருகே உள்ள செங்கல் சூளையில் சேத்துப்பட்டு நமத்தோடு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (35), கலையரசி (29)  தம்பதி  குழந்தைகளுடன் வேலைசெய்து வந்தனர். நேற்று அதிகாலை செங்கல்சூளை அருகே பச்சையப்பன், கலையரசி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News June 25, 2024

தி.மலை: விவசாயிகளுக்கு ரூ.3,000 மானியம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தோப்புகள், பழத் தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்கப்படுத்த ஏக்கருக்கு ரூ.3,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

News June 24, 2024

திருவண்ணாமலை: 2 ஆவது மாஸ்டர் பிளான்

image

திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளதாகவும், இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

உயிருக்கு போராடிய இளைஞரை மீட்ட ஆட்சியர்

image

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செல்லும் போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

News June 24, 2024

குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை

image

தி.மலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் 2 குழந்தை திருமணம் நடக்க இருந்ததை கண்டறிந்து தடுக்கப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுக்க தொடர்ந்து கிராமங்களில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்துபவர், ஏற்பாடு செய்பவர், பங்கேற்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார்.

News June 24, 2024

தி.மலை: முதல்வர் பதவி விலக வேண்டும்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் இன்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கள்ளச்சாராயம் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

News June 24, 2024

தபால் நிலையம் குறை தீர் கூட்டம்

image

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2024 ஆண்டின் 2ஆம் காலாண்டு பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர் கூட்டம் தி.மலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறும். பொதுமக்கள் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாகவோ அல்லது 27 ஆம் தேதிக்குள் தபால் மூலமோ அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!