Tiruvannamalai

News July 3, 2024

சிறு வயது திருமணங்கள் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2024 கடைப்பிடித்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறு வயது திருமணங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

News July 2, 2024

தி.மலை: மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அழகுசேனை கிராமத்தில் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெரு விளக்கு எரியவில்லை என பல முறை புகார் அளித்தும் ஊராட்சித் தலைவர் ஏழுமலை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News July 2, 2024

தி.மலை: பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

தி.மலை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜுலை.21 அன்று நடைபெறுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் https://<>www<<>>.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பள்ளிதலைமை ஆசிரியரிடம் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

அண்ணாமலையார் கோவிலில் பிரமோற்சவ விழா அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா வரும் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யுமாறும் தெரிவிக்கபட்டுள்ளது.

News July 1, 2024

கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News July 1, 2024

தமிழ்நாடு அரசு ஐடிஐ நேரடி சேர்க்கை தொடங்குகிறது

image

திருவண்ணாமலை, அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) இன்று முதல் ஜூலை 15ஆம் தேதிவரை பல்வேறு பிரிவுகளில் உள்ள 178 காலியிடங்களை நிரப்ப நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, ஜாதிச்சான்று, ஆதார் நகல், 5 பாஸ்போர்ட் புகைப்படம், வங்கி கணக்கு நகல், ஆகியவற்றுடன் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டுமென முதல்வர் பொன்.தனசேகரன் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

தமிழ்நாடு அரசு ஐடிஐ நேரடி சேர்க்கை தொடங்குகிறது

image

திருவண்ணாமலை, அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை பல்வேறு பிரிவுகளில் உள்ள 178 காலியிடங்களை நிரப்ப நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, ஜாதிச்சான்று, ஆதார் நகல், 5 பாஸ்போர்ட் புகைப்படம், வங்கி கணக்கு நகல், ஆகியவற்றுடன் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டுமென முதல்வர் பொன்.தனசேகரன் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

சிறப்பு கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 860 பஞ்சாயத்துகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் பசுமை வீடுகள் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். பயனாளிகள் புதுவீடு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் இப்புகாரின் மீது விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று(ஜூன் 29) தெள்ளார்,ஆரணி,ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றிய 3 பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News June 30, 2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவண்ணாமலை, செங்கம் அருகே நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மேலும் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு உத்தரவின்படி நேரடி சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களுடன் கல்லூரியில் முதல்வரை தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!