India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு(ஜூலை 5) தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாகவே இரவில் மழை பெய்து குளிர்ச்சி நிலவுதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏரி, குளம் நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழில், வீட்டு பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க உரிய ஆவணங்களுடன் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் தாசில்தார் மூலம் அனுமதி வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 35 இடைநிலை, 11 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை (ஜூலை 6) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய சான்று ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தி.மலை மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திருவண்ணாமலை குறுமைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்தோர் சிறு தொழில்கள் வியாபாரம் செய்ய தனிநபர் மற்றும் சுயஉதவிக் குழுக்களுடன் கடனுதவி பெற அதற்கான திட்ட அறிக்கை, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற சான்றிதழ்களுடன் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வுசெய்து, தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 19 இன்படி தற்காலிகமாக 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள். எனவே, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் மழை அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 3) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான குழு கூட்டம் நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
உலக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
தினத்தை முன்னிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருவண்ணாமலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.