Tiruvannamalai

News January 24, 2026

தி.மலை: செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

image

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ந.மோட்டூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து 25 முதல் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.

News January 23, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

தி.மலை: புதிய பிஸ்னஸ் தொடங்க ஆசையா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைபபடுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>இந்த இணையதளம் <<>>மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும். SHARE பண்ணுங்க.

News January 23, 2026

BREAKING: தி.மலையில் கனமழை வெளுக்கும்

image

திருவண்ணமலை மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

தி.மலையில் EB பில் எகுறுதா..?

image

தி.மலை மாவட்ட மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

JUST IN: தி.மலையில் காதலனை கைகழுவிய காதலி

image

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியான மதன்குமார்- இறையூரை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் வீட்டை வெளியேறினர். காவல் நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது பெண்ணை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்தனர். மேலும், மகளின் காலில் பெற்றோர்கள் விழுந்ததால் மனம் மாறிய ஆனந்தி, காதலன் மதன்குமாரை கைவிட்டு பெற்றோருடன் சென்றார்.

News January 23, 2026

தி.மலை மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். தி.மலை மாவட்ட அதிகாரி- 9445000193, தி.மலை வட்டம்-9445000194, போளுர்-9445000195, செங்கம்- 9445000196, வந்தவாசி- 9445000197, ஆரணி- 9445000198, செய்யாறு-9445000199, தண்டராம்பட்டு-04188-246400.*கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள். SHARE

News January 23, 2026

தி.மலை: மாடால் வெடித்த தகராறு

image

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி காளியம்மாள்(50). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த இருசன் மனைவி சாந்தி (57) என்பவருக்கும், மாடு வயல்வெளியில் மேய்ந்த தகராறு தொடா்பாக முன்விரோதம் உள்ளது. இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

News January 23, 2026

தி.மலை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தி.மலை மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

தி.மலை: டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுமி பலி

image

ஆரணி அருகே மருசூர் ஊராட்சிக்குட்பட்ட பூசணிப்பாடிதாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு-பிரியா தம்பதிக்கு கோகுல் (6) என்ற மகனும், கோபிகா (4) என்ற மகளும் இருந்தனர். வீட்டின் அருகே டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், பின்புறம் உள்ள கலப்பையில் கோபிகா விளையாடி கொண்டிருந்தார். சக சிறுவர்கள் திடீரென டிராக்டரை ஆன் செய்ததால் கோபிகா கலப்பையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!