Tiruvannamalai

News August 16, 2024

திருவண்ணாமலை விவசாயிக்கு விருது 

image

புதுடெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கு சிறந்த முன்னோடி விவசாயிக்கான விருது – 2024 ஆர்டிஓ பாலசுப்பிரமணியனிடம் இன்று வழங்கி வாழ்த்து பெற்றார். இவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

News August 16, 2024

திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 16, 2024

தி.மலையின் அடையாளம் சாத்தனூர் அணை

image

சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. மொத்த அணையின் நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. இங்குள்ள முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன. முதலை பண்ணையை காண பலர் வருகை தருகின்றனர்.

News August 16, 2024

அத்தியந்தல் கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்

image

அத்தியந்தல் கிராமத்தில் சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல், அந்தப் பொருள்களை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் உடனே கிராம மக்கள் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 16, 2024

சுதந்திர தின விழாவில் ரூ.6.46 கோடியில் நலத்திட்ட உதவி

image

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 391 பயனாளிகளுக்கு ரூ.6.46 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 350 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

News August 15, 2024

தி.மலையில் 3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டதில் ஆயத்த ஆடையகம், நவீன சலவையகம் அமைக்க ₹3 லட்சம் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க 10 பேர் கொண்ட குழுவாகவும், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து குறைவாகவும் இருக்க வேண்டும் எனவும், இதில் பயனடைய விரும்பினால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

தி.மலையில் எலி மருந்தை உட்கொண்ட மாணவிகள் சிகிச்சை 

image

ஆரணி அடுத்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் தின்பண்டத்தை தினமும் சக மாணவிகள் தினமும் அவருக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டுள்ளனர். எடுப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க நேற்று மிக்சரில் எலி மருந்து கலந்து கொண்டு வந்துள்ளார். வழக்கம்போல் மாணவிக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 15, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

கேரள கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, தர்மபுரி, இராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News August 15, 2024

தேசிய கொடியை ஏற்றிய அமைச்சர்

image

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான எ.வ.வேலு அவர்கள் இன்று இந்திய சுதந்திர திருநாட்டில் 78ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

News August 15, 2024

அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த எம்.எல்.ஏ.

image

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரணி உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார். பின்னர், தேசிய தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி வணங்கி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

error: Content is protected !!