India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn Gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கத்திற்கு அடுத்த கெங்கவரம் மதுரா நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ராணிபேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இன்று ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முதியோர் உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 597 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுரித்தினர்.
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மோகனா நீட் தேர்வில் 658 மதிப்பெண் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் 9ஆம் இடம் பிடித்துள்ளார். செய்யாறு அடுத்த கரிவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவர் அரசு பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி இந்த கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 21.08.2024 அன்று நடைபெறும். முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் காலை 9.00 மணிக்கு சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் (06.09.2024) அன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாயும்,நான்கு சக்கர வாகனங்களுக்கு 2000 ரூபாயும் முன்பணமாக செலுத்த வேண்டும். தகவலுக்கு 8870486926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கலந்துகொண்டு மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலையில் 2024-25ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட நபர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஆக.25ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 7401703484 என்ற எண்ணில் அழைக்கலாம் என அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள, இப்போது தொழில் செய்து கொண்டிருக்கும் அல்லது தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் குறைந்த செலவில் மதி சிறகுகள் தொழில் மையங்களில் இருந்து சேவைகளைப் பெறலாம். திருவண்ணாமலை அலுவலகத்தை 04175-299159 என்ற தொலைபேசி எண்ணிலும், தெள்ளார் அலுவலகத்தை 04183-299578 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.