India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் பலர் தங்களது கடமையாக செய்து வருகின்றனர். இந்த மாதம் (ஆடி மாதம்) கிரிவலம் செல்ல ஜூலை 20 மாலை 5.59 மணி முதல் ஜூலை 21 ஞாயிறு மாலை 3.46 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் 2024-25 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் காப்பீட்டு பலனை பெற உடனடியாக நாளை மாலைக்குள் பிரீமியம் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் 18 ஒன்றியங்களில், 860 கிராம ஊராட்சிகளில், 124 சிறப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அளித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று TNPSC குரூப் 1 போட்டி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 4,846 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 3,376 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1,470 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. எந்த வித பிரச்சனைகளும் முறைகேடுகளும் இன்றி தேர்வு அமைதியான முறையில் நடந்தது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் இலவச தையல் இயந்திரம் பெற மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் ஜூலை 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் ஜுலை.19 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பெற்றோர், மூத்த குடிமக்களின் நலன் பாதுகாப்பு சட்டப்படி பராமரிப்புத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்களின் விண்ணப்பங்களுக்கு 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும், 14567 என்ற கட்டணமில்லா முதியோர் உதவி எண் சேவை காலை 8 முதல் இரவு 8 மணி வரை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2024-25 நிதி ஆண்டிற்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை, மரவள்ளி ஆகியவற்றிற்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும். ராபி பருவத்தில் சிவப்பு மிளகாய் பயிருக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளும், மரவள்ளி, வாழைக்கு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில், “மாவட்டத்தில் இன்று, குரூப் 1 தேர்வை 4864 பேர் எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாதவண்ணம் 16 கண்காணிப்பாளர், 16 மொபைல் யூனிட், ஒரு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், வினா, விடைத்தாள்களை பாதுகாப்பாக சேர்க்கவும் தேர்வு முடிந்ததும் பாதுகாப்பாக கொண்டு வரவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.