Tiruvannamalai

News July 16, 2024

உதவித்தொகை வழங்காததை கண்டித்து போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்கள் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News July 16, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

மக்கள் குறைதீர்வு கூட்டம் 662 பேர் மனு

image

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம்  கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, சாலை வசதி, வீடு வழங்கும் திட்டம், பயிர் கடன், தாட்கோ கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 662 பேர் மனு அளித்தனர்.

News July 16, 2024

திருவண்ணாமலையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது

News July 16, 2024

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூலை 21ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், 21 ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நாள் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்திருக்கும் எனவே தேர்வாளர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை திட்டமிடுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக வருகின்ற 21.07.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று
(15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 15, 2024

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று (15.07.2024) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மேலும், கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News July 15, 2024

திருவண்ணாமலை இளைஞர்களுக்கு நற்செய்தி

image

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில், வரும் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் <>https://www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

அண்ணாமலையார் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்கள் வருகை தருவர். இரண்டு நாள் தொடர் அரசு விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

error: Content is protected !!