Tiruvannamalai

News July 21, 2024

திருவண்ணாமலையில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்.

image

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர். ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

News July 21, 2024

யாசகம் எடுத்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேற்று கிரிவலப் பாதையில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிரிவல பாதையில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்போரை எச்சரித்தார். மேலும் இது போன்ற யாசகம் பெரும் நபர்களை கண்டறிந்து மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் காவல்துறை மூலம் விசாரணை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

News July 20, 2024

திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கியது

image

தி.மலை, ஆடி பௌர்ணமி முன்னிட்டு இன்று மாலை கிரிவலம் தொடங்கியது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கிரிவலம் செல்ல ஆரம்பித்தனர். நாளை மாலை 3:40 மணி வரையிலும் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

image

தி.மலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 2-ம் கட்ட சிறப்பு முகாம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 18 ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் செப். 5 வரை நடைபெற உள்ளது. இதுவரை 16 சிறப்பு முகாம்களில் 5140 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 1762 மனுக்கள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3378 மனுக்கள் முதல்வரின் இணையதளம் மூலமாக துறை சார்ந்த அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

News July 20, 2024

திருவண்ணாமலையில் பக்தர்கள் புகார் அளிக்கலாம்

image

தி.மலைக்கு இன்று பௌர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களிடம் இருந்து ஆட்டோக்களில் வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூல் செய்தாலும், உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுமென மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார். பக்தர்கள் 04175-232266, 9384808191 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம்.

News July 20, 2024

திருவண்ணாமலையில் நாளை மின் தடை

image

ஆரணி , திருவண்ணாமலை , கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, செய்யாறு, மங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்தப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

பட்டா மாற்றம் செய்ய ரூ.2000 லஞ்சம்: விஏஓ கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றுவதற்காக ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஏஓ பால்பாண்டியன் லஞ்சமாக ரசாயனம் தடவிய 2000 ரூபாயை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

News July 19, 2024

இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

image

திருவண்ணாமலையில் Part time Job மூலம் மோசடிகாரர்களால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம்  புகார் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், அவ்விருவரையும் நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணம் மொத்தம் ரூபாய். 9, 98, 021/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

News July 19, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

தி.மலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தகவல் ஆணைய விசாரணை முகாம், மாநில தகவல் ஆணையா் மா. செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத் தகவல் அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா். இதில், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை தொடா்பான 37 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

error: Content is protected !!