India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23.10.2024 ஆம் தேதி காலை 8.00 மணிமுதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக ஏல தேதி ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
தி.மலை, கிரிவலப்பாதையில் மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கான பணிகள், பக்தர்கள் தங்கும் இடம், பேவர் ப்ளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, அவை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு புஷ்பா என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ரூபாய் 3000 லஞ்சம் கேட்டதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புஷ்பாவிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களமாக பிடித்து தற்போது வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (அக்.19) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்ட உள்ளன. சிறுங்கட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கீழ்பென்னாத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்
துணை முதல்வரான பிறகு முதல் முறையாக இன்று (அக்.18) மாலை திருவண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பாதிரி முதல் பெரியவல்லி வரை ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்திய வனத்துறையை கண்டித்து, திருவண்ணாமலையில் அக்.21ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தென் பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்து, 100 அடியை இன்று எட்டியது.
Sorry, no posts matched your criteria.