India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நெல் பயிருக்கு டிஏபி, யூரியா, பொட்டாஷ் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். டிஏபி உர பயன்பாட்டினை குறைத்து அதே அளவு ஊட்டச்சத்தினை தரக்கூடிய சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் மகசூல் பெறலாம். 50 கிலோ டிஏபி உரத்தில் 9 கிலோ தழைச்சத்து மற்றும் 23 கிலோ மணிச்சத்து உள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உமாபதி தெரிவித்துள்ளார்.
திரு அண்ணாமலையார் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் ஆலயத்தில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் , பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடர்பான கூட்டம் இன்று ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை, இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட கிளை அசாதாரண அவசர வருடாந்திர கூட்டம் ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன்
தலைமையில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் ஜூலை 27 தேதிக்குள் தங்களுடைய விவரங்களை 9443252187 வாட்ஸ்அப் எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டுமென ரெட் கிராஸ் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆடி பிறந்த நிலையில் தி.மலை மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்ததால் 30 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி தொடங்கிவிட்டது. 7.47 லட்சம் மெட்ரிக் டன் நெல், 48 ஆயிரம் மெட்ரிக் டன் பயிர் வகைகள், 79 ஆயிரம் மெட்ரிக் டன் சிறுதானியம் என மாவட்டத்தில் விளைச்சல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் திருவண்ணாமலை – செங்கம் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஆரணி பகுதியில் பட்டு உற்பத்தி பூங்கா அமைக்கப்பட வேண்டும் போன்றவை மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா வரும் 29ஆம் தேதி காலை 6 மணி முதல் 7.15 மணிக்குள் உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடைபெறும். அப்போது பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 569 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மனுவின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செங்கம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் முதல் மேல் செங்கம் வரை கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல் தலைவர் மல்லிகா நேரில் ஆய்வு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
செங்கம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் முதல் மேல் செங்கம் வரை கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல் தலைவர் மல்லிகா நேரில் ஆய்வு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.