Tiruvannamalai

News August 5, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 336.6 மி.மீ மழை பதிவு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 336.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 66.2 மி.மீ, குறைந்த அளவாக ஜமுனாமுத்தூர் 11 மி.மீ மழை பதிவாகின. மேலும் சேத்பட்- 59.7, செங்கம்- 34.6, கீழ்பெண்ணாத்தூர்-28.6, செய்யாறு-24, கலசப்பாக்கம்-24, ஆரணி-20.6, வெம்பாக்கம-20, தி.மலை-16, வந்தவாசி-12 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.

News August 5, 2024

கலசபாக்கம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்

image

கலசபாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் கடலாடி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் கலைஞரின் வருமுன் காப்பீட்டு சிறப்பு மருத்துவ முகாம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

News August 5, 2024

தி.மலையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியாக டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 5, 2024

திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்

News August 5, 2024

தி.மலை மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

image

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மு.பிரியதர்ஷினி பரந்தூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலாக தனி அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள இரா.பிரதீபன் திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

News August 5, 2024

தி.மலை மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

image

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மு.பிரியதர்ஷினி பரந்தூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலாக தனி அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள இரா.பிரதீபன் திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

News August 4, 2024

செங்கம் பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

image

அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு இன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளைஞர் நலம், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமிருந்து செங்கம், மகரிஷி மேல்நிலைப்பள்ளி விருதை பெற்றது. பள்ளி முதல்வர் வி.கார்த்திக் விருதைப் பெற்றுக்கொண்டார்.

News August 4, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.

News August 4, 2024

தி.மலை நண்பர்களே.. நட்புனா என்னானு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே திருவண்ணாமலையில் உள்ள 5,64,104 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!