Tiruvannamalai

News September 21, 2024

டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

image

ஆரணி-பையூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அரசு மதுபான கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்த ரூ.3.70 லட்சத்தை எடுத்துச் சென்ற புருஷோத்தமன் என்ற ஊழியரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அவர் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 21, 2024

வந்தவாசியில் இன்ஸ்டா காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்

image

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த வந்தவாசி வெண் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருக்கும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்மணி என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பொன்மணி வீட்டை விட்டு வெளியேறி காதலனை வந்தவாசியில் கரம் பிடித்துள்ளார். இந்தநிலையில், காதலர்கள் நேற்று வந்தவாசி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

News September 21, 2024

தி.மலையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News September 21, 2024

கூடுதல் பெட்டிகளுடன் மெமு ரயில் இயக்கம்

image

சென்னை கடற்கரை – தி.மலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் அக்.1ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்குள் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

News September 21, 2024

எஸ்பி அலுவலகத்தில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை அன்று (24.09.2024) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. இதில் நுழைவு கட்டணமாக 100 ரூபாயும், முன்பணமாக இரு சக்கர வாகனத்திற்கு 1000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 2000 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு 8870486926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

சமுத்திரம் பகுதியில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

image

தி.மலை மாநகராட்சிக்குட்பட்ட செங்கம் சாலையில் சமுத்திரம் பகுதியில் எமலிங்கம் அருகே இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சிறுபான்மையினர் நலன் & வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் & அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 20, 2024

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு ஊரக நகர வாழ்வாதார இயக்கம் இணைந்து அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நாளை நடத்துகின்றனர். இதில் 120க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 7000க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் செப்23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 4ல் தொடங்கி 10 நாட்கள் கொண்ட விழா டிசம்பர் 13ம் தேதி மகா தீபத்திருவிழாவில் முடிவடைகிறது. எனவே இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் செப் 23ஆம் தேதி காலை 5.45 மணிக்கு நடைபெறும் எனவும், அதை தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

கண்ணமங்கலத்தில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது

image

கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரியில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கண்ணமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில் அந்த பெண் காஞ்சீபுரத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் காஞ்சீபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி அலமேலு(50) என்று போலீஸ் விசாரணையில் உறுதியானது.

News September 20, 2024

மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது

image

சேத்துப்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி தலைமறைவான பகுதி நேர ஆசிரியர் தனக்கரசு(43) காவலர்களால் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கோபத்தில் ஆசிரியரை தாக்கினர். தனக்கரசு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆசிரியரை தாக்கிய 6 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சேதுபட்டு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!