India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. விபத்து குறித்து டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். பைக் மீது மோதிய லாரி, திமிரியில் உள்ள ஒரு கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மேலும், லாரி ஓட்டுநரான விஸ்வநாதனை நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா, டிச.4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. டிச.13ஆம் தேதி மாலை திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
ஆரணி பைபாஸ் சாலையில் நேற்று இரவு விபத்து ஏற்படுத்தி மூன்று வாலிபர்கள் உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனத்தை ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து சாலையில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் சோதனை செய்ததில் விபத்து ஏற்படுத்திய லாரி திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்றது என்றும் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற ஓட்டுநரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான மகளிருக்கான வாள் விளையாட்டுப் போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று (22.09.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா?.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ், ராஜேஷ், மணி ஆகியோர் பலியாகினர். விபத்தில் உயிரிந்த இளைஞர்கள் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 550-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 8,607 பேரை தோ்வு செய்து பணி ஆணைகள் வழங்கி உள்ளனா் என்றாா்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான எரிவாயு உருளை நுகர்வோர் மாதாந்திர குறை தீர்வு நாள் கூட்டம் வருகின்ற 26.09.2024 அன்று காலை 11.00 மணிக்கு தி.மலை வட்டாட்சியர் அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயனடையுமாறு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தி.மலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.