India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அதிமுக வேட்பாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உடன் பாஜக மாவட்ட தலைவர் சி ஏழுமலை ,பையூர் சந்தானம் உள்ளிட்டோர் இருந்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தாெடங்கவுள்ளதால் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், ஸ்ரீஅனுபாம்பிகை
ரிஷபேஸ்வரர் திருக்கோயில் மற்றும் காக்கங்கரை ஸ்ரீவிநாயகர் ஆலயம் ஆகியவற்றில் அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்த அறங்காவலர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் படிவத்தை வழங்கினார். இந்த வேட்புமனு தாக்கலின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை கச்சராப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தில் பால், தயிர், இளநீர், மஞ்சள் குங்குமம் சந்தனம் மற்றும் வாசனை திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நேர்த்திக்கடனாக அழகு குத்தி , காவடி தூக்கி வழிபட்டனர். கொழுக்கட்டை சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆரணி மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை இன்று ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி வி கஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் இராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் தூசி மோகன், ஜெயசுதா, பன்னீர்செல்வம், பாரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை திண்டிவனம் புறவழிச்சாலையில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மற்றும் சரக்கு லாரி கார் ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ. அஸ்வத்தாமன் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும் என்று உறுதியளித்தார்
அத்திமலைப்பட்டு மலைகளில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.