India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் திரளான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. இவர் அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது மாங்காயை மரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு இறந்துவிட்டார்.
தி.மலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக நேற்று வேங்கிக்கால் ஊராட்சி ஓம் சக்தி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாற்றுத்திறனாளி நபருக்கு பழ கூடை கொடுத்து 12-D படிவத்தினை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மௌன்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.03.2024) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (26.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை ஒட்டி, காய்கள் மற்றும் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. எம். எஸ் தரணிவேந்தனை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நேற்று (மார்ச் 25), திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கலியபெருமாளை அறிமுகப்படுத்தி தெற்கு மாவட்ட செயலர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். திருவண்ணாமலை, திருப்பத்துார், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்துார்,செங்கம், ஜோலார்பேட்டை தொகுதிகளில் அ.தி.மு.க. வுக்கு அதிக ஓட்டுகள் பெற்று தரும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் செயின் பரிசளிக்கப்படும் என கூறினார்.
சேத்துப்பட்டில் நேற்று மாலை சேத்பட் நான்குமுனை சாலை சந்திப்பில் தி.மு.க கழக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனுக்கு வாக்கு அளிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் ஏராளமான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 36.6 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர்.
Sorry, no posts matched your criteria.