Tiruvannamalai

News August 10, 2025

தி.மலை கோயில் இத்தனை பழமையானதா?

image

தி.மலை தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியத்தில் கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டைமான் இளந்திரையன் இந்த நகரத்தை ஆண்டுள்ளார். பல்லவர், சோழர் இங்கு ஆட்சி செய்துள்ளனர். சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிவன் கோயிலாக இது உள்ளது. இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது

News August 10, 2025

திருவண்ணாமலையில் இயற்கை விவசாய சந்தை

image

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று (ஆக.10) இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ரசாயனம் கலப்படம் செய்யப்படாத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகள், கீரைகள், நாட்டு விதைகள், மரபு விதைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

News August 10, 2025

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

தி.மலை: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது .தெரியாத WhatsApp மற்றும் Telegram செயலிகளின் குழுக்கள் மூலம் போலியான ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை செலுத்தி ஏமாராதீர்கள்!! (ஆகஸ்ட்-09) நேற்று அந்த வகையில் விழுப்புணர்வு புகைப்படத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News August 10, 2025

தி.மலை மாவட்ட இரவு காவல் ரோந்து பனி காவலர் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.… திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவலர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணும் உள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

News August 9, 2025

தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES TEAM MANAGER பணிக்கு 25காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் பதிவு<<>> செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

தி.மலை: சொட்டுநீர் பாசனம் 100% மானியம்

image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பதற்கு 100% மானியம் வழங்கப்படுமென திருவண்ணாமலை வட்டாரத் தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார் மற்றும் நில ஆவணங்களுடன் செங்கம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவில் தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு செய்யலாம். இத்தகவலை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தி.மலை: உங்க போனுக்கு தேவை இல்லாத மெசேஜ் வருதா?

image

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தங்களிடமிருந்து பணம் பறிக்கும் புதிய மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவையில்லாத குறுஞ்செய்தி உங்கள் போனுக்கு வருகிறதா? உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930க்கு அழைக்கவும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து புகாரளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இம்முகாமிற்கு வரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!